Tirunelveli

News April 10, 2025

சிறுமியின் நிர்வாண படம் கேட்டு டார்ச்சர் – போக்சோவில் கைது

image

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 10, 2025

நெல்லையில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

News April 10, 2025

கோயில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி 

image

மானூர் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த 3-ம் தேதி கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர் சுமார் 12 அடி உயரமுள்ள கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்-09) உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2025

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் அம்பை, கல்லிடைக்குறிச்சி , பாவூர்சத்திரம் , தென்காசி ,கடையநல்லூர் , சங்கரன்கோவில் ,ராஜபாளையம் , சிவகாசி ,விருதுநகர் , மதுரை , திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி , வழியாக இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிறன்று நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறது. தற்போது இந்த சிறப்பு ரயில் மே மாதம் முதல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட நீதிபதி

image

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் (ஏப்ரல் 9) தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலக விளம்பர வாகத்தின் மூலம் சமரச தின விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி/மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாய்சரவணன் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

News April 10, 2025

குமரி அன்ந்தன் மறைவுக்கு நெல்லை முன்னாள் எம்பி அஞ்சலி

image

நெல்லை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஞானதிரவியம், மறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடனிருந்தார்.

News April 9, 2025

நெல்லை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் விடுமுறை

image

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 10.04.2025 (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News April 9, 2025

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழி

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.04.2025) மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெஃபரின் கிரேசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 9, 2025

அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

இன்று (ஏப்.9) காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணை நீர் இருப்பு 88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 91 கன அடி நீர் வருகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 103.48 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 285 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு நீர் இருப்பு 9 அடியாக உள்ளது. நம்பியார் நீர் இருப்பு 13 அடியாகவும் கொடுமுடியாறு நீர் இருப்பு 14 அடியாகவும் உள்ளது.

News April 9, 2025

தமிழ் பெயர் பலகை வைக்க கால அவகாசம்

image

நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!