Tirunelveli

News March 12, 2025

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

image

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 487 கனஅடி நீரும், பாபநாசம் அணைக்கு 912 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை பகுதியில் 15.8 மில்லி மீட்டர், பாபநாசம் அணைப்பகுதியில் 18 மிமீ மழை பெய்துள்ளது.

News March 12, 2025

ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் 197 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை

image

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் தெரிவிக்கையில், விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழு நெல்லை மாவட்டதில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் கடந்த 3,4ம் தேதிகளில் அரசு வேளாண் மையங்கள், தனியார் என 25 விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ததில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.13, 94, 795 மதிப்பிலான 197 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிப்பு.

News March 12, 2025

ரூ.1 கோடி பரிசு அறிவித்த பாஜக

image

பாரதிய ஜனதா கட்சியினர் மும்மொழி கொள்கையை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மோடி அரசின் மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு எ அறிவித்துள்ளனர். மேலும் அதில் சிபிஎஸ்இ பள்ளியில் கிடைக்கும் கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க கூடாதா ?என கேள்வி எழுப்பியுள்ளனர்.

News March 12, 2025

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச் 04] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு எண் 100ஐ டயல் செய்யவும்

News March 11, 2025

100 தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

image

100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு முதல் +2 டிகிரி டிப்ளமோ பட்டதாரிகள் பங்கேற்கலாம். வேலை நாடுபவர்கள் அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.privatejob.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவியவர் யார் தெரியுமா.?

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணன். திருக்குறுங்குடி பள்ளியிலும் பயின்ற இவர் 1984ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கி முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு சொந்தக்காரர். அவரின் சாதனை தமிழ்நாடு பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. SHARE IT

News March 11, 2025

நெல்லையில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

image

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்று சென்றது.கடம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தங்கம்மாள்புரம் கேட் பகுதியில் ரயில் சென்ற போது C-1 பெட்டியில் மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதனால் பயங்கர சத்தம் கேட்டது ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது. ரயில்வே கார்டு மதுரை ரயில்வே கண்ட்ரோலுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 11, 2025

தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுத சென்ற மாணவி

image

திருநெல்வேலி மாவட்டம், இட்ட மொழி அருகே உள்ள விஜய அச்சம்பாடு வடலிவிலை பள்ளியில் பயிலும் மாணவி மதுமிதாவின் தந்தை காலமானார். தொடர்ந்து தற்போது மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இன்று(மார்ச்.11) கணித தேர்வு நடைபெறும் நிலையில் மாணவி மதுமிதா தனது தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றார்.

News March 11, 2025

நெல்லையில் கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க

image

நெல்லையில் மிக கனமழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 , தொலைபேசி எண்:0462-2501070, வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். *குழந்தைகளை பாதுக்காப்பாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தல்* கட்டாயம் ஷேர்

News March 11, 2025

கோழிக்கு அரிசி எடுத்து சென்றாலும் குற்றம்தான்

image

திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட துணை பதிவாளர் கௌதம் கார்த்திக் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ரேஷன் கடைகளில் கீழே கொட்டப்பட்டுள்ள ரேஷன் அரிசிகளை கோழிக்கு கொண்டு சென்றாலும் குற்றம்தான் .எனவே ரேஷன் கடை ஊழியர்கள் இதில் கவனமாக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களை முறையாக வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!