Tirunelveli

News January 9, 2026

நெல்லை: கல்யாணத்துக்கு தங்கம் + ரூ. 50,000 – APPLY

image

நெல்லை மக்களே, அரசின் சார்பாக திருமண உதவி திட்டங்களில் திட்டம் 1: ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம். திட்டம் 2: ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிச்சு பணம் வரலையா இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்ப எண் பதிவு செய்து சேக் பண்ணுங்க. இதில் DISTRICT WELFARE OFFICE APPROVED ன்னு பணம் + தங்கம் வந்தடும். புதுசா விண்ணப்பிக்க உங்க அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகுங்க. SHARE பண்ணுங்க!

News January 9, 2026

நெல்லை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

நெல்லை: கீழே விழுந்து பெயிண்டிங் தொழிலாளி பலி.!

image

ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் இளம்வழுதி (வயது 58). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நாவல் குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியில் கால் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுக்குறித்து மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை.

News January 9, 2026

நெல்லை: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். SHARE IT..

News January 9, 2026

நெல்லை: ரூ.1.32 கோடி மோசடி; மேலாளர் மீது வழக்கு

image

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்மேய்ப்பர் நகரில் உள்ள, வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவன அலுவலகத்தில் ரூபாய் 1,32,48,000 நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் மீது புகார் எழுந்தது. மண்டல செயல்பாட்டு மேலாளர் ஹரிஹரன் கொடுத்த புகாரில் நேற்று, தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

நெல்லை: விஷமருந்தி பெண் தற்கொலை செய்த சோகம்..

image

நெல்லை மாவட்டம், ஹரிகேசவநல்லூரை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி பேராட்சி வயது 65. இவர் உடல்நல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலமாகாததால் மன உளைச்சலில் இருந்த பேராட்சி நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கினார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News January 9, 2026

நெல்லை: உங்க ஊரு தாசில்தார் நம்பர் இருக்கா..!

image

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
1.திசையன்விளை- 9384094224
2.சேரன்மகாதேவி- 9384094223
3.மானூா்- 9384094222
4.இராதாபுரம்- 9445000674
5.நாங்குநேரி- 9445000673
6.அம்பாசமுத்திரம்- 9445000672
7.பாளையங்கோட்டை- 9445000669
8.திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

நெல்லையில் பெண் எடுத்த சோக முடிவு

image

நெல்லை மாவட்டம், ஹரிகேசவநல்லூரை சேர்ந்தவர் மலையாண்டி இவரது மனைவி பேராட்சி வயது 65. இவர் உடல்நல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலமாகாததால் மன உளைச்சலில் இருந்த பேராட்சி நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கினார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 9, 2026

நெல்லை மாநகர மக்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை..!

image

சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகும் முதலீட்டு விளம்பரங்கள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற ஏமாற்றுதல் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 8, 2026

நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்<>கு க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!