Tirunelveli

News January 10, 2026

நெல்லை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 10, 2026

நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 10, 2026

நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

image

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 10, 2026

நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

image

V.K.புரத்தைச் சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.

News January 10, 2026

நெல்லை: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News January 10, 2026

நெல்லை: 10th படித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

திருநெல்வேலி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 10, 2026

நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

image

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

News January 10, 2026

நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

image

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

News January 10, 2026

நெல்லை: வாலிபர் உயிரை பறித்த பாதாம் ஜூஸ்

image

நெல்லை, பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கேசவ ராஜா(32). இவர் கார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாதாம் (கீர்) ஜூஸை எடுத்து குடித்தார். இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கேசவ ராஜா இறந்தது குறித்து நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 9, 2026

நெல்லை : EB பில் – சான்றிதழ்கள் எல்லாமே இனி Whatsapp -ல!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!