India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் ஜன.09க்குள் <

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

நெல்லை ராதாபுரத்தை சேர்ந்தவர் பேரின்பராஜ் (35) இவர் பூதப்பாண்டி அருகே தங்கியிருந்து கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் தனது கடனை திருப்பி கேட்க சாமியார்மடம் சென்றுள்ளார். அந்த சமயம் அங்கு பைக்குகளில் வந்த சுபின் (35), ஜோஸ் (33), சபரி (26) உள்பட 4 பேர் பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பேரின்பராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை பணகுடியில் சில தினங்களுக்கு முன் லெட்சுமணன் (15) என்ற பள்ளி மாணவனை சபரி ராஜன் (23) என்ற இளைஞர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாணவன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சபரி ராஜனை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில், மாணவன் லெட்சுமணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <

சேரன்மாதேவியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரது மகள் ஸ்ரீவரகோமதி (17). இவர் சேரன்மாதேவியில் உள்ள அரசு பள்ளியில் 12வது படித்து வந்தார். மாணவி பள்ளிக்கு லீவ் போட்டு பெற்றோரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்கு செல்ல கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை.

அம்பையை சேர்ந்தவர் கட்டிடட தொழிலாளி சேர்மராஜ் (26). இவர் நேற்று திசையன்விளை அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை செல்ல டூவீலரில் ஏறியுள்ளார். அப்போது மயக்கமான அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேர்மராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று இரவு முதல் நாளை ஜனவரி 8ஆம் தேதி காலை ஆறு மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல் மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கைபேசி எண்கள் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன அவசர காவல் உதவி தேவைக்கு சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <
Sorry, no posts matched your criteria.