India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு நெல்லை வழியாக இரவு 9.55க்கு தாம்பரம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை காவல் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது தொடர்பு கைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு காவல்துறை அவசர உதவி தேவைப்படுபவர்கள் அந்தந்த கோட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக உங்கள் செல்போனில் எஸ்எம்எஸ் வந்தால் பதிலளிக்கவோ அல்லது OTPகளைப் பகிரவோ வேண்டாம். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலோ புகார் அளிக்கலாம்” என எச்சரித்துள்ளனர். *SHARE NOW*
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (அக்.30) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை பின்பற்றி நெல்லை மாவட்டத்திலும் இந்த உத்தரவு அமலில் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (அக்.30) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராகவும் முன்னாள் எம்பி வசந்தி முருகேசனை நியமித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 13 லட்சத்து 86 ஆயிரத்து 44 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு முகாம்கள் மூலம் 21,809 வாக்காளர்கள் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 4 பேரை விசாரணை செய்தனர். அதில் டீக்கடை தொழிலாளியிடம் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் நேற்று(அக்.28) கைது செய்தனர், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரைப்பட வர்த்தக குடும்பம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணை நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வாழை படத்தில் நடித்த நடிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நேற்று (அக்.28) நடைபெற்றது. திரைப்பட வர்த்தக பிரிவு கலைக் குடும்ப நல சங்க மாநில பொருளாளர் ரகுமான் ஷா தலைமை தாங்கினார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி பரிசுகள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்.28) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் வழியில் நாங்குநேரி ஏர்வாடிக்கு வருகை தந்த திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அங்குள்ள சாலையோர டீ கடையில் மக்களோடு மக்களாக நின்று தேநீர் அருந்தி விட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.