Tirunelveli

News November 8, 2024

பல் பிடுங்கிய விவகாரம்: 3ஆவது முறையாக ஆஜராகாத பல்வீர் சிங்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணிபுரிந்த பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது குறித்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும்(நவ.,7) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பல்வீர் சிங் ஆஜராகவில்லை. தொடர்ந்து 3ஆவது முறையாக அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

News November 7, 2024

நெல்லையில் சூப்பர் மார்க்கெட் கட்ட இடைக்கால தடை 

image

நெல்லை மாவட்டம் ஜோதிபுரம் கிராமத்தில் களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில், சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை நகராட்சியின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 12 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

லாரி மோதியதில் சிப்காட் ஊழியர் பலி

image

கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் முருகேசன் நேற்று வேலையை முடித்துவிட்டு கங்கைகொண்டான் 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2024

சென்னைக்கு இன்று இரவு சிறப்பு ரயில் 

image

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக இன்று (நவ.7) இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை எக்மோர் சென்ட்ரல் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சூரசம்ஹாரம் பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்ப அவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News November 7, 2024

நெல்லையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை அளவு வெகுவாக குறைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில இடங்களில் குறைந்த அளவு மழை பதிவானது. இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (நவ.7) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

கந்தசஷ்டி விழா; ஏடிஜிபி இன்று ஆலோசனை

image

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று திருச்செந்தூர் வருகிறார். தற்போது மதுரையில் இருக்கும் அவர் நேரடியாக திருச்செந்தூர் வருகை தந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

News November 7, 2024

நெல்லை மாவட்ட நீதிபதியான ராபின்சன் ஜார்ஜ்

image

நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உட்பட 12 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ராபின்சன் ஜார்ஜ் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அல்லி பிறப்பித்துள்ளார்.

News November 7, 2024

நெல்லையில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட முன்னாள் படைவீரர்கள் படை வீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் எனது தலைமையில் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

News November 7, 2024

சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு(06732) இன்று(நவ.,7) இரவு 8.50க்கும், நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு(06731) இன்று இரவு 10.50க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News November 7, 2024

பேட்டை VAO வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை!

image

பழையப்பேட்டை அருகே ஐஓபி காலனியை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். VAO-ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மேரி பாளை., அரசு மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற நிலையில், மேரியின் தந்தை நேற்று காலை மகள் வீட்டிற்கு சென்றபோது கதவு உடைக்கப்பட்டு 51 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!