Tirunelveli

News January 18, 2026

நெல்லையில் நள்ளிரவு முதல் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று (ஜனவரி 17) நள்ளிரவு முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போராட்டங்கள் விழித்தவை நடந்த அனுமதி கிடையாது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

நெல்லையில் நள்ளிரவு முதல் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று (ஜனவரி 17) நள்ளிரவு முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போராட்டங்கள் விழித்தவை நடந்த அனுமதி கிடையாது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுபடி இன்று ஜனவரி 17 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். காவல் சரகம் வாரியாக பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News January 18, 2026

திருநெல்வேலி மாவட்டத்தில், இரவு ரோந்துப்பணி காவல் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு உட்கோட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தேவர்குளம் மாரி செல்வி,நாங்குநேரி சுதா, பழவூர் சுரேஷ் குமார், சேரனமகாதேவி மங்கையர்க்கரசி,கல்லிடை குறிச்சி கலா ஆகியோர், திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உட்கோட்டங்களில், ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

News January 17, 2026

நெல்லையில் சீருடை பணியாளர்கள் சிறப்பு வகுப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 17 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் சீருடை பணிகளில் சேர ஆர்வமும் தேவையான உடல், கல்வித் தகுதி உடையவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பானது நாளை முதல் தொடங்க உள்ளதாகவும், இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

நெல்லை: 3 பேருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது!

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரியின் அலைபேசியில் இருந்து அவரது நண்பர் பாலாஜி, பாஞ்சாலராஜன் என்பவரது மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, இசக்கி பாண்டி ஆகிய மூவரை பாஞ்சாலராஜன் அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹரி கொடுத்த புகாரில் பாஞ்சாலராஜனை இன்று போலீசார் கைது செய்தனர்.

News January 17, 2026

நெல்லை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

நெல்லை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT

News January 17, 2026

நெல்லை: சாலை விபத்தில் கொத்தனார் பலி

image

நெல்லையை அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(59). கொத்தனாரான இவர் கல்லூரில் இருந்து சுத்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

நெல்லை: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

நெல்லை: தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!

image

அம்பை பகுதையை சேர்ந்தவர் விஷ்வா (23). வேத பாடசாலை மாணவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் பூஜைக்காக நேற்று முன்தினம் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சென்றனர். நேற்று பூஜைகள் முடிந்ததும் தடுப்பு அணைக்கு சென்று, குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஷ்வா தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு குழித்துறை GH-ல் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

error: Content is protected !!