India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,25) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் என்சிசி 5ஆவது பட்டாலியன் மாணவர்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. #அனைத்துப் பள்ளிகளிலும் இன்று காலை முதல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே முத்தையா தெருவை சேர்ந்தவர் அஜித் சிவராஜா(42). இவர், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக பேரூராட்சியை அணுகியுள்ளார். அங்கு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அஜித் சிவராஜாவுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.7,000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்த பாளை மூலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன் கடந்த ஆண்டு ஆக.30 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் இருப்பதால் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். இதில் அஜித் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால் தலைமறைவாக இருந்த அஜித்குமார் இன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் – கோவை சிறப்பு மெமு ரயில் மூலம் நெல்லைப் பயணிகள் ரூ.120 செலவில் பழனி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவைக்கு பகலில் செல்லும் ரயிலில் நெல்லையிலிருந்து ஏறும் பயணிகள் மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் மெமோ ரயிலில் ஏறினால் 3 மணிக்கு பழனிக்கு செல்ல முடியும். இதற்கு நேரடி டிக்கெட் ரூ.120 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுன் 25 வது வார்டுக்குட்பட்ட நெல்லை கால்வாயில் தூர் வாரும் பணி இன்று(நவ.24) நடைபெற்றது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டி கழிவு பொருட்கள், மண் ஆகியவற்றை முழுமையாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இந்த கால்வாய்யினை தூர்வாருவதின் மூலம் நெல்லை டவுன் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பாளை வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெனி, 37 வது வார்டு வட்ட செயலாளர் வேல் பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன் ஆகியோர் கேடிசி நகர் 37வது வார்டு பகுதியில் உள்ள 7 பூத்துகளுக்கு நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணியினை ரோஸ்மேரி பள்ளியில் இன்று பார்வையிட்டனர். இதில் வட்ட பிரதிநிதி சின்ன பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1490 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம் கடந்த 16, 17, நேற்று நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
Sorry, no posts matched your criteria.