India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திசையன்விளையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.44.76 லட்சத்தை நிறுவன ஊழியர்களே நூதனமாக மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் கடன் பிரிவு அலுவலர் மற்றும் கள அலுவலர் என இரண்டு பேர் மீது நேற்று(நவ.29) போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#நெல்லையில் இன்று(நவ.,30) காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது. #காலை 10.30 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர்ஸ் பள்ளி வளாகத்தில் உயர்கல்வி கருத்தரங்கு நடைபெறுகிறது.#பிற்பகல் 3 மணிக்கு தாமிரபரணி கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நெல்லை எம்பி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
பேட்டை மலையாள மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேட்டை கொம்பையா என்ற கார்த்திக் (21), ஐயப்பன் என்ற சசி (19), பெருமாள் (68) ஆகியோரை துணை ஆணையர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவுபடி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்ட பிரின்சிபல் நீதிபதி அமிர்த வேலு, நெல்லை தலைமை ஜுடுசியல் மாஜிஸ்திரேட் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். இதுபோல், நெல்லை சிறப்பு நீதிபதி இசக்கியப்பன், நெல்லை மாவட்ட பிரின்சிபலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 32 நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டை மலையாள மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேட்டை கொம்பையா என்ற கார்த்திக் (21), ஐயப்பன் என்ற சசி (19), பெருமாள் (68) ஆகியோரை துணை ஆணையர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவுபடி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
1.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் புறக்கணிப்பு செய்கின்றனர். 2. நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நாளை (நவ.30)காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார். 3. காலை 10:30 மணி அளவில் ராபர்ட் ப்ரூஸ் எம்பி தனியார் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளைய(நவ.30) சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காலை 10:30 மணியளவில் பாளையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பாளையில் உள்ள எம்பி அலுவலகத்தில் வைத்து 11 மணிக்கு கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.மாலை 3 மணி அளவில் தாமிரபரணி பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
டவுன் பழனி தெருவில் நேற்று முன்தினம்(நவ.27) மது போதையில் நின்று கொண்டிருந்த கும்பல் அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் அவர் சென்ற வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் நேற்று ஒரு நபரை பிடித்த நிலையில் மற்ற 3 பேரையும் நேற்று(நவ.28) இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுத்தமல்லி இந்திரா காலனியைச் சேர்ந்த வாலிபர் முத்துகிருஷ்ணன் 25 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முத்துக்கிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ‘சட்டமும் சமுதாயமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நாளை(நவ.,30) காலை 10.30 மணிக்கு வக்கீல் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமை தாங்குகிறார். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
Sorry, no posts matched your criteria.