Tirunelveli

News January 30, 2026

நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

நெல்லை: ரூ.85,920 சம்பளத்தில் வங்கி வேலை

image

SBI வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் ரூ.48,480 – ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து பிப்.18 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News January 30, 2026

நெல்லை: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

நெல்லை: பட்டபகலில் அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

image

பழைய பேட்டை சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று பகலில் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது மாடியின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News January 30, 2026

JUST IN நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தைப்பூச பண்டிகை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று(ஜன.30) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை காலை 11:15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் பிப்.1 அன்று இரவு 10:35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

News January 30, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

நெல்லை: ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

image

வள்ளியூர் அருகே புதூரைச் சேர்ந்த அரவிந்தன்(28) ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அவரது நண்பர்களான டேவிட்(20), பொன்ராஜ்(25) ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை புதூரில் அரவிந்தன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த டேவிட், பொன்ராஜ் ஆகியோர் அரவிந்தனை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News January 30, 2026

நெல்லை: கோயிலில் திருடிய நபருக்கு 3 ஆண்டு சிறை

image

நெல்லை உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில் நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம்(48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசங்கர குமாரி தீர்ப்பளித்தார்.

News January 30, 2026

நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் – தேமுதிக பொதுச்செயலாளர்

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜன.30) நெல்லை வருகிறார். தாழையூத்து அமேகா பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பூத் முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் – தேமுதிக பொதுச்செயலாளர்

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜன.30) நெல்லை வருகிறார். தாழையூத்து அமேகா பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பூத் முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!