Tirunelveli

News January 1, 2025

நெல்லை வந்தே பாரத் ரயில் வேகம் அதிகரிப்பு; நேரம் குறைப்பு 

image

சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வேகம் அதிகரிப்பால் இதன் பயண நேரம் ஐந்து நிமிடம் குறையும். இதுபோல் புருலியா – நெல்லை வாராந்திர விரைவில் தாதர் – நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நெல்லை எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதன் பயண நேரம் 35 நிமிடங்கள் குறைகிறது. பல தென் மாவட்ட முக்கிய ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

News January 1, 2025

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் இன்று முதல் மாற்றம்

image

தெற்கு ரயில்வே 56 ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று(ஜன.1) முதல் நெல்லையில் இரவு 8:10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி இன்று முதல் இரவு 8:40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6:40க்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இதேபோல் பிற ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. *ஷேர்*

News January 1, 2025

நெல்லை எக்ஸ்பிரஸ் உள்பட 56 ரயில்களின் வேகம் அதிகரிப்பு

image

தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் தேவைக்கேற்ப புதிய ரயில்களை இயக்குவதோடு சில ரயில்களையும் நீட்டிப்பு செய்து வருகிறது. சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களையும் அளித்து வருகிறது.அந்த வகையில் சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு விரைவில் சென்று சேரும் வகையில் இயக்கப்படுகின்றன.தற்போது தெற்கு ரயில்வே 56 ரயிலின் வேகத்தை அதிகரித்துள்ளது. இதில் நெல்லை, கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும்.

News December 31, 2024

அண்ணா மிதிவண்டி போட்டிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து வருகின்ற ஜனவரி 4 அன்று காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாவது பரிசு ரூ3000 மூன்றாவது பரிசு ரூ.2000 என அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்வதற்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.

News December 31, 2024

சீமான் கைது – நெல்லை முபாரக் கண்டனம்

image

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிச.31) கைது செய்யப்பட்டார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசுக்கு எதிராக கண்டன குரல் எந்த வகையிலும் எழக்கூடாது என எண்ணுவதே சர்வாதிகாரம் தான் என தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

நெல்லை எம்.பியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

image

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை பிறக்கப் போகும் 2025ம் ஆண்டு புது வருடம் செல்வ செழிப்புள்ள வருடமாகவும், இன்பம் பொங்கும் வருடமாகவும், சமய சமூக நல்லிணக்கம் உருவாகக்கூடிய ஆண்டாகவும் இருக்க வேண்டும் எனவும், இந்த புத்தாண்டில் அனைத்து சமுதாய மக்களும் எல்லா வளமும் நலமும் பெற்று வளமோடு வாழ பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

புத்தாண்டை முன்னிட்டு 6000 போலீசார் பாதுகாப்பு

image

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 6000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

News December 31, 2024

நெல்லை – தாதர் சாளுக்கியா ரயில் நேரம் மாற்றம்

image

நாளை (ஜன.01) புத்தாண்டு முதல் (11022) திருநெல்வேலி – தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.25 மணிக்கு புறப்படும் ரயில் இனி 3.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய ரயில்வே கால அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

News December 31, 2024

மனிதக்கழிவுகளை அகற்றும் விவகாரம் – ஆட்சியர் தகவல் 

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிச.30) மாலை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டத்தில் மனித கழிவுகளை கைகளால் அகற்றக் கூடியவர்கள் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுத்து மூலம் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

News December 31, 2024

தேசிய வருவாய் வழி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

image

நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி & திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பிப்.22ல் நடைபெறவுள்ளது. மாணவர்கள் இன்று முதல் இணையதள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என நெல்லை சி இ ஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவோருக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். *ஷேர்

error: Content is protected !!