Tirunelveli

News February 21, 2026

சென்னை – நெல்லை ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 8 ரயில்கள், நாளை (பிப்ரவரி 22) முதல் ஏப்ரல் 6 வரை, மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News February 21, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.21) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 21, 2026

நெல்லை மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.21) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News February 21, 2026

BREAKING: திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்கள்

image

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார்.

1.திருநெல்வேலி – பா.சத்யா
2.அம்பாசமுத்திரம் – சிவசங்கரன்
3.பாளை – சங்கர நாராயணன்
4.நாங்குநேரி – செல்வம்
5.ராதாபுரம் – கிரிஜா தாமரைப்பாண்டியன்

News February 21, 2026

திருநெல்வேலி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு

image

திருநெல்வேலி மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

திருநெல்வேலி: ஆன்லைன் காலில் ரூ.25 லட்சத்தை ஏமாந்த நபர்

image

பாளை பகுதியில் வசிக்கும் ரோசரி ராயல் என்பவர் ஆன்லைன் அழைப்புகள் மூலம் அதிக லாபம் அடையலாம் என்ற ஆசை வார்த்தையினை உண்மை என நம்பி பல்வேறு பண பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.25,25,000 பணத்தை அனுப்பி ஏமாந்தார். அவர் அளித்த புகாரில் நேற்று மாநகர சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

News February 21, 2026

நெல்லை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

நெல்லை: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

நெல்லை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 21, 2026

நெல்லை: விபத்தில் சிக்கிய மேயர் கார் – பரபரப்பு

image

நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது நயினார்குளம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கார் மீது தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மேயருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பின் ஓட்டுநரை அழைத்த மேயர் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

News February 21, 2026

நெல்லை: விபத்தில் சிக்கிய மேயர் கார் – பரபரப்பு

image

நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது நயினார்குளம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கார் மீது தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மேயருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பின் ஓட்டுநரை அழைத்த மேயர் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

error: Content is protected !!