India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட மக்களே.. சாதாரண மக்களும் அரசிடம் கேள்வி கேட்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் RTI சட்டம். இதை பயன்படுத்தி ஒரு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.. திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதற்கு எந்த துறையில் யாரிடம் கேட்பது என்பது நிறைய பேருக்கு குழப்பம் ஏற்படும்.இந்த <

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விதைகளை இல்லங்களில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் பயன்பெற உழவன் செயலியில் அல்லது https://tnhorticulture. tn. gov. in என்ற வலைதளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித

➡️நெல்லையில் 132 மையங்களில் 36,011 பேர் நாளை குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

நெல்லை மாவட்டத்தில் 449 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

நெல்லை மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வரும் 12ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். இதற்கான உரிய ஆவணங்களை மக்கள் கொண்டு சென்று பயன்பெறலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள் சீலன், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரினச் சேர்க்கையாளர் கும்பலால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், செல்போன், ஏடிஎம் கார்டுகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கன்குளம் பள்ளி விடுதியில் 7-ம் வகுப்பு மாணவன் சேர்மதுரை 8ம் தேதி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரணையில், நீரில் மூழ்கியதால் பலி என உறுதியானது. பெற்றோர் புகாரின் பேரில் விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பணப் பேரம் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மறுத்து, அவதூறு பரப்புவோர் மீது எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

நெல்லை, கூடங்குளம் அருகே காமநேரியிலிருந்து கொத்தங்குளம் சென்ற மினி வேன், மாடு சாலையில் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லை கூட்டப்புளியில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் இருந்த நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. தவெக பெயரை நீக்கினால் தான் மண்ணெண்ணை வழங்கப்படும் என கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மண்ணெண்ணெய் வழங்கியதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.