Tiruchirappalli

News December 12, 2024

விளையாட்டு பயிற்றுநர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை பயிற்றுவிக்கும் தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் யாரேனும் இருந்தால்,திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டார்.மேலும், விண்ணப்பம் செய்ய கடைசி நாள்:29.12.24 என்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2024

திருச்சியில் விடுமுறையா? ஆட்சியர் தகவல்

image

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால் சென்னை உள்பட 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், “திருச்சிக்கு விடுமுறை இல்லை” என திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். அரையாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அறிவிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் விடுமுறை கோரி சமூக ஊடங்களில் அனல் பறக்கிறது.

News December 12, 2024

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரம் சாற்றுதல் உற்சவம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியான நேற்று கைசிக ஏகாதசியை முன்னிட்டு, அர்ஜுன மண்டபத்தில் ஶ்ரீநம்பெருமாளுக்கு 365 வஸ்திரம் சாற்றுதல் சேவை நடந்தது. நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது.

News December 11, 2024

திருச்சி: பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்/ கண்காணிப்பு அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2025 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு விண்ணப்பிக்க https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 15ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உரிய காலத்தில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

News December 11, 2024

வைர கிரீடத்தில் காட்சியளிக்கும் நம்பெருமாள்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று வைரம் மற்றும் மரகதத்தால் பொறிக்கப்பட்ட புதிய கிரீடத்தை நம்பெருமாளுக்கு  சாற்றி, கைசீக ஏகாதசி புறப்பாடு புதிய வைர கீரீடத்துடன் சிறப்பு ஆஸ்தான சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News December 11, 2024

மண்ணச்சநல்லூர் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு தரிசனம்

image

திருச்சி மண்ணச்சநல்லூரில் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை ஸ்ரீ பூமிநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வந்தால் கட்டாயம் மனை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பது ஐதீகம். இந்நிலையில் இந்த கோவிலில் இன்று பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு தரிசனம் செய்து, ஈசனின் அருள் பெற்றார்.

News December 11, 2024

திருச்சி அரசு பள்ளி மாணவிக்கு ஆளுநர் பரிசு

image

செம்மொழி தமிழாய்வு பாரத மொழி திருவிழாவையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், மருங்காபுரி அடுத்த பழுவஞ்சி அரசு பள்ளி மாணவி மோகனப்பிரியா கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் மாணவிக்கு தமிழக ஆளுநர் ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்ட உள்ளார். ஷேர் செய்யவும்

News December 11, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்

image

திருச்சியிலிருந்து வரும் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை வழியாக மதியம் 2.50 மணிக்கு வேலூர் சென்றடையும். அதனை தொடர்ந்து மறுமார்க்கமாக வேலூரில் இருந்து 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், அடுத்த நாள் காலை திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 10, 2024

ஸ்ரீரங்கம் பெண்ணிடம் ரூ.1.61 கோடி மோசடி

image

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் தேவகி. இவரது செல்போனுக்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தொடரபு கொண்ட மர்ம நபர், சீனாவுக்கு அனுப்ப வந்த ஒரு பார்சலில் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், வங்கி கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதனை நம்பிய தேவகி ரூ.1.61 கோடியை அனுப்பியுள்ளார். பிறகு ஏமாற்றப்பட்டதை, உணர்ந்த தேவகி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

error: Content is protected !!