India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அமராவதி அணையில் இருந்து 36,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் நாளை காலை 6 மணி முதல் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஆற்றில் ஓட்டி செல்லவோ கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT
திருச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவை அவரது இல்லத்தில் இன்று தொட்டியம் மாவட்ட பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆலோசனைப்படி அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். உடன், தொட்டியம் மேற்கு மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகள் செயல்படும் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த (13-12-2024) தேர்வுகளை ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருச்சி, கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவவாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு”கலைஞர் கைவினை திட்டம்”என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,கட்டிட வேலைகள்,நகை செய்தல்,பூட்டு தயாரித்தல் சிற்ப வேலைபாடுகள், பொம்மைகள் தயாரித்தல், கண்ணாடி வேலைபாடுகள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.இந்த திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள கலைஞர்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்
திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
2025ம் ஆண்டிற்கான பெண்களுக்கு சேவை புரிந்த மகளிர்க்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதிகளாக 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்,5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூகசீர்திருத்தம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருக்க வேண்டும்.w ww.award.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யாலம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 3000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இது பல்வகை பூஞ்சைகள் மூலம் தோன்றுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்து விட வேண்டும் என்றும், பயிர் சுழற்சி முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பில் சிக்கி இருந்தால் புகார் தெரிவிக்க 0431 2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.மேலும் 9384056213 என்ற whatsapp எண்ணிலும் புகார் அளிக்கலாம்.பிறகு,வட்ட அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என்றார்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரள் அணி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.