Tiruchirappalli

News December 16, 2024

திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பரபரப்பு

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 16, 2024

கார் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சி மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மட்டப்பாறைபட்டி அருகே எதிரே டூவீலரில் வந்த ரமேஷ் குமார் என்பவர் வேகமாக வந்ததில் முத்துராமலிங்கம் கார் மீது மோதி காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 15, 2024

சுழலில் சிக்கியவர்களை மீட்க சென்ற இளைஞர் பலி

image

காணக்கிளியநல்லூரைச் சேர்ந்த சிவசக்தி(24) நேற்று சிறுவயலூர் பெரிய ஏரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது சுழலில் ஒருவர் சிக்கியதை பார்த்தார். உடனே சிவசக்தி தண்ணீரில் குதித்து காப்பாற்ற முயன்ற போது அவர் சுழலில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வந்த மீட்பு படையினர் சிவசக்தியை சடலமாக மீட்டனர். உடல் லால்குடி ஜிஹெச் கொண்டு செல்லப்பட்டது…

News December 15, 2024

எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை: திருமாவளவன்

image

திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும், மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்ற நிலையில் பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கிறது என்றார்.

News December 14, 2024

திருச்சியில் 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினரால்6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகின்ற 16ம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை 6:00 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே,இந்த முகாம்களில் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டார்.

News December 14, 2024

ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு ஈடு செய்ய முடியாது: அமைச்சர்

image

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உயிரிழந்ததை ஒட்டி அமைச்சர் கேஎன்நேரு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில் தந்தை பெரியாரின் குடும்பத்தில் பிறந்து, முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றி, நமது கழகத் தலைவர் முதலமைச்சருக்கு உற்ற நண்பராகவும் திகழ்ந்த அன்னாரின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாதது என தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

திருச்சியில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடம்

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து மேயர், மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  (14.12.2024) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News December 14, 2024

வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

image

திருச்சியில் நேற்று குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் சென்று அங்கு மோசடி செய்யும் நிறுவனங்களில் பணியமர்த்தி ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் செயல்படும் ஒரு ஏஜென்சியில் சோதனை செய்து ஒருவரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

News December 14, 2024

திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.14) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசியை தொடர்ந்து திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 13, 2024

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருக்குறள் தொடர்பான புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட உள்ளது. வரும் 23ஆம் தேதி புகைப்பட கண்காட்சியும், 24,30,31 ஆகிய தேதிகளில் போட்டிகளும் நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் தங்களது பெயரை நேரில் வந்து கொடுக்கலாம் என்று ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!