India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நல அமைச்சர் நாசர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, 469 பயனாளிகளுக்கு ரூ.26.77 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் நினைவு பரிசுகளையும் வழங்கினார்கள்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ் பி வருண் குமார் உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை போக்ஸோ வழக்கின் கீழ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதில் அனைத்து போட்டி தேர்வர்களும் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும், இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வனச்சரக அதிகாரிகளுக்கு யானை தந்தத்தால் ஆன பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 4 சக்கர வாகனம் 1, 2 சக்கர வாகனம் 2 என மொத்தம் 3 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 23ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 19ஆம் தேதி ஆயுதப்படை வளாகத்திற்கு சென்று வாகனங்களை பார்வையிட்டு, ரூ.5 ஆயிரம் செலுத்தி முன் பதிவு செய்துகொள்ளலாம் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகரில் மாநில அளவில் வரும் 28ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 21ஆம் தேதி மாவட்ட அளவிலான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. எனவே இதில் பங்கேற்க விரும்புபவர்கள் திருச்சி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றுகள், இதரச் சான்றுகள், முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 547 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார்.
திருச்சி ரயில் நிலையம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அய்யாக்கண்ணு உட்பட பல நிர்வாகிகளையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.