India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து இலவச எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் குறித்து 31 நாட்கள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு முடித்த 18 – 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற ஏப்.07-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் தற்போது வரை ரூ.60,95,575 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.56,68,925 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், ஹெல்த் கேர் டெக்னாலஜி துறையில், புதிய முதுகலை டிப்ளமோ படிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. தனியார் மருத்துவமனையுடன் இணைந்து தொடங்கப்பட உள்ள இந்த படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்வில் கல்லூரி இயக்குனர் அகிலா மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மரக்கடையில் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தனது குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் டெல்லி செல்லும் முதல்வர், தமிழ்நாட்டில் நிலவும் கேஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி சென்று கோரிக்கை விடுக்காதது ஏனென கேள்வி எழுப்பினார். தொடர்ந்து திருமணமாகும் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்றார். மேலும், மகளிருக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்குவோம் என்றார்.

திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காலிப்ணியிடங்களை நிரப்புவதாக கூறிய அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்புகள் மட்டுமென தெரிவித்த அவர், தமிழக அரசு யூஸ்லஸ் அரசு என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிராஸ் தலைவர்களை திமுக பணப்பையில் போட்டுக்கொண்டு, சிறுபான்மையினருக்கு அநீதி விளைப்பதாக கடுமையாக சாடினார்.

திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கேஸ் சிலிண்டர் மானியம் என்னாச்சின முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அமைச்சர் நேருவை நேரடியாக விமர்சித்தவர், கோடி கணக்கில் லஞ்சம் வாங்கியவர் என தெரிவித்தார். மேலும் முறையான கழிவறை வசதி இல்லாததால் தான் தூத்துக்குடி மாணவி உயிரிழக்க காரணமென அவர் சாடினார்.

திருச்சி மாவட்டம் தாயனூர் பகுதியில் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 16 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.