India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள்,2024-2025ம் ஆண்டுக்கு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்காய பயிருக்கு ரூ.2062.46ம், வற்றல் மிளகாய்க்கு ரூ.1220.18ம், வாழைக்கு ரூ. 3460.48-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1632.68ம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
பர்மா, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நிலஆவணங்கள், கடவுச்சீட்டுகள் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகள் தகுந்த ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சியைச் சேர்ந்த வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெற, இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் நடிகர் சூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விடுதலை 2 திரைப்படம் கமர்சியல் வெற்றியை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் ஒன்று இத்திரைப்படத்தில் உள்ளது. மேலும் இந்த படத்திற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விடுதலை 3 எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை அமைக்க ரூ.175 கோடியில் கட்டுமான பணி மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அரசாணை வெளியான வெறும் இரண்டே நாட்களில் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 21ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. திருச்சியில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார். ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்களை 30 தினங்களுக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும், விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சார்பில் 18 மாவட்டங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி லால்குடி வட்டத்தில் உப்பாற்றின் குறுக்கே 1 பாலம், நந்தியூர் கால்வாயில் 1 பாலம் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் வைக்கல் புரந்தங்குடி – ரெத்மாங்குடி சாலையின் குறுக்கே 1 பாலம் என மொத்தம் 3 பாலம் கட்ட சுமார் ரூ.22 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
‘அயோத்தியில் கடவுள் பெயரை கூறி போட்டியிட்டவர் தோல்வி அடைந்தார். ஆனால், அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றார்.
மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து பேசியுள்ளனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு சரியானது. மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு கையெழுத்திட முடியாது என ஆளுநர் கூறுவது தவறு’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் நேற்று ஒரு சடலம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.