Tiruchirappalli

News January 28, 2025

திருச்சி – ராஜஸ்தான் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

image

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் – திருச்சி இடையே இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரயிலில் இரு மார்க்கமாகவும் பிப்.3 முதல் பிப்.28 வரையும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டியும், இதேபோல் திருச்சியில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரயிலில் இரு மார்க்கமாகவும் பிப்.5 முதல் மார்ச் 1 வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 28, 2025

இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்மாதிரி: அமைச்சர்

image

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் பேசினார். அப்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News January 28, 2025

உறவினர்கள் சாலை மறியல்: குவிந்த போலீசார்

image

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் இன்று காலை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மேலும் அன்புவின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு குவிந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

News January 28, 2025

வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள்

image

திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,வெங்காய மண்டி பகுதியில் இருந்து வந்த வேனில் வந்த நபரிடம் சோதனை நடத்தியதில்,அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரிந்தது. உடனே,அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.6,875 மதிப்புள்ள 2.451 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 28, 2025

திருச்சியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி அன்பு என்பவர் இன்று (ஜன.28) நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டப்பட்டு,  திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 28, 2025

உப்பு வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

திருச்சி ஜீயபுரம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் இளைஞா் ஒருவா் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில் இறந்து கிடந்தவர் குளுமணியை சேர்ந்த உப்பு வியாபாரி அசோக் குமார் (41) என்பதும், மன உளைச்சலில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

News January 28, 2025

திருச்சி ரயில்வே சாதனை

image

தென்னக ரயில்வே திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரயில்வே நிதியாண்டான ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31- 2024 வரை பயணிகள் போக்குவரத்தில் திருச்சி ரயில்வே கோட்டம் ரூ. 386.54 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது  ஆண்டை விட 3.67 சதவிகிதம் அதிகமாகும் இந்த ஆண்டு மட்டும் 29 லட்சம் பயணிகள் திருச்சி கோட்டத்தில் பயணித்துள்ளனர் இது பயணித்துள்ளனர் நிதியாண்டை காட்டிலும் 6.58 சதவிகிதம் அதிகமாகும்.

News January 28, 2025

திருச்சியில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொது ஏலம் 01.02.2025 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பொன்மலையில் உள்ள திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். SHARE NOW !

News January 27, 2025

மக்களிடமிருந்து குவிந்த 443 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, கோரிக்கை, புகார் தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடம் இருந்து 443 மனுக்கள் பெறப்பட்டன.

News January 27, 2025

திருச்சி: கூடுதல் விமான சேவைகள் இயக்க திட்டம்

image

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 15% வளர்ச்சியும், சரக்குப் போக்குவரத்து 13% வளர்ச்சியும் அடைந்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை மேம்படுத்தும் வகையில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், கோடை காலத்தில் ஹைதராபாத், சென்னைக்கு தினசரி சேவைகளை இயக்கவுள்ளது. சரக்கு முனையம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய இயக்குனர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!