India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி காந்தி( 22.5.24) மார்கெட்டில் நேற்று காய்கறி வரத்து குறைந்துள்ளதால் இன்று விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ. 40க்கு விற்ற பீன்ஸ் ரூ.200க்கு உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ. 60க்கு விற்ற கேரட் ரூ.100, அவரை, கத்தரி ரூ.30ல் இருந்து ரூ.100,பெல்லாரி 30ல் இருந்து ரூ.50,சின்ன வெங்காயம் ரூ.80 க்கு விற்கப்படுகிறது. இந்த காய்கறி விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சான்றோர்கள் 2023-24ம் கல்வியாண்டிற்கு தங்களது குழந்தைகளை பல்வேறு கல்விகளில் சேர சார்ந்தோர் சான்று ஆன்லைன் http://exwel.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்தோர் சான்று பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தினர்.அதன்படி இன்று 3 பெண்களையும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த ஒரு நபரையும் போலீசார் அழைத்து தலா ரூ.2000 அபராதம் விதித்து, அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
திருச்சியில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி விமானநிலையத்தில் 13 செ.மீ, சமயபுரத்தில் 12 செ.மீ, திருச்சி ரயில்நிலையத்தில் 8 செ.மீ, மணப்பாறை, திருச்சி நகரம், வத்தலை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 7 செ.மீ சிறுகமணி KVK AWS, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் 6 செ.மீ, முசிறி, துவாக்குடி IMTI, பொன்மலை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் மழைப் பதிவானது.
வங்கக் கடலில் இன்றும், நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
திருச்சி பிச்சாண்டார் கோயிலில் தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் பக்தர்களின் நலன் காக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மதியம் சரியாக 12:30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது பக்தர்கள் நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி என்ன கோஷத்துடன் தேர்வு வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி சோமரசன் பேட்டை நாடார் சத்திரம் பகுதியில் இன்று மண்பானை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் செய்து வைத்த மண்பானைகள் மழையில் கரைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மண்பானை செய்வதற்காக வெளியூரில் இருந்து வரவழைத்த களிமண் மழையில் கரைந்து வீணாவதால் , இன்றைய வெப்பநிலையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பரபரப்பாக வேலையில் இறங்கினர்.
திருச்சியில் நேற்று இரவு பெய்த கனமழையால் திருச்சி விமான நிலையம் தண்ணீரில் தத்தளித்தது. அதே போல், திருச்சி ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ள நீர் போல பெருக்கெடுத்து ஓடியது. பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்ட விமான நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (20.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 45.2 மி.மீட்டர், விமான நிலையம் 129.4 மி.மீட்டர், திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 82.8 மி.மீட்டர், டவுன் 68 மி.மீட்டர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 1154.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 48.09 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (20.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 45.2 மி.மீட்டர், விமான நிலையம் 129.4 மி.மீட்டர், திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 82.8 மி.மீட்டர், டவுன் 68 மி.மீட்டர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 1154.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 48.09 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.