India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சைபெருமாள்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வைரபெருமாள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள உத்தமர்கோயிலில், மும்மூர்த்திகளும் தேவியர்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் இங்கு பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைத்துள்ளது. குருமார்களில் 7 பேரும் வழிபட்ட சிறப்பான கோயில் இது என்பதால் இது ஆதி குருத்தலம் எனப்படுகிறது. மேலும் குருபரிகார தலமாக இது போற்றப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

கூகுளில் <

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்களை அறிவித்துள்ளார். மண்ணச்சநல்லூர் – ஏகலைவன் சீனிவாசன், லால்குடி – மரியகமல், மணப்பாறை – சக்தி ஆற்றலரசு, ஸ்ரீரங்கம் – சதீஷ், திருவெறும்பூர் – திலீபன் ரமேஷ், முசிறி – கலைச்செல்வன், துறையூர் – துரை சங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

மண்ணச்சநல்லூரை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் (65) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையில், தொழில் போட்டி காராணமாக கூலிப்படையை வைத்து, கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரி சிவகாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.