Tiruchirappalli

News May 24, 2024

திருச்சியில் வழிப்பறி செய்த நபர் மீது குண்டாஸ்

image

திருச்சி கடந்த 23.4.2024ம் தேதி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, வாகனத்தை வழிப்பறி செய்வதாக பிரவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் பிரவீன் குமார் மீது திருட்டு அடிதடி உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால், அவரை,இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.

News May 24, 2024

திருச்சியில் இனி தினமும் குடிநீர் விநியோகம்

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இன்று முதல் தினசரி குடிநீர் வழங்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ் குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு சரி செய்யப்பட்டதை அடுத்து இனி தினமும் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

திருச்சியில் 4 இடங்களில் ஆணையர் ஆய்வு

image

திருச்சி காவிரி நகர் பகுதியில் மழை நீர் வடிகால் சரி செய்யும் பணியினை இன்று மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்பின்,
அமெரிக்கன் மருத்துவமனை பகுதியில் சுற்றி உள்ள கழிவுநீர் அடைப்பினை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு அண்ணாநகர் பகுதியில் சேதம் அடைந்த சாலை, மழை நீர் வடிகால்களையும், பர்மா காலனி பகுதியில் உள்ள பூங்காவினையும் ஆய்வு மேற்கொண்டார்.

News May 24, 2024

திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையத்தை “விசிட்” அடித்த ஆட்சியர்.!

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடமும் , ராணுவ துறையினரிடமும் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க உத்தரவிட்டார்.

News May 23, 2024

மணச்சநல்லூர்: பெண் தர மறுப்பு! மார்பிங் செய்த இளைசர்

image

மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கைநாதன் . இவர் அப்பகுதியில் உள்ள குடும்பத்தில் பெண் கேட்டு தர மறுத்த நிலையில், அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்துள்ளார். மேலும் அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக திருமண பத்திரிகை அடித்து இரு வீட்டாரின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அழைப்பிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரில் இன்று(மே 23) கைது செய்யப்பட்டார்.

News May 23, 2024

திருச்சி: புரோட்டா மாஸ்டர் குத்திக் கொலை

image

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடும்ப பிரச்னை காரணமாக வீட்டுக்கு செல்லாமல் வெளியே தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று(மே 22) இரவு மர்ம நபர்களால் முகமது அலி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 23, 2024

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று(22.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 30 மி.மீ, புலிவலம் 12 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 15 மி.மீ, லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 80.4 மி.மீ, லால்குடி 8.4 மி.மீ, நாத்தியார் ஹெட் 15.6 மி.மீ, புள்ளம்பாடி 77.8 மி.மீ என மாவட்டத்தில் மொத்தமாக 326.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 23, 2024

முத்தரையர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

image

பெரும்பிடுகு முத்தரையர் இன் 1349 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 22, 2024

திருச்சி ஆட்சியர் தகவல்

image

திருச்சியில் முதல் கட்டமாக அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, தொட்டியம், முசிறி, துறையூர்,புள்ளம்பாடி, உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் புறம்போக்கு பகுதிகள் மற்றும் தனியார் இடங்களில் பரவியுள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றிட உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது என திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!