Tiruchirappalli

News May 23, 2024

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று(22.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 30 மி.மீ, புலிவலம் 12 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 15 மி.மீ, லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 80.4 மி.மீ, லால்குடி 8.4 மி.மீ, நாத்தியார் ஹெட் 15.6 மி.மீ, புள்ளம்பாடி 77.8 மி.மீ என மாவட்டத்தில் மொத்தமாக 326.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 23, 2024

முத்தரையர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

image

பெரும்பிடுகு முத்தரையர் இன் 1349 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 22, 2024

திருச்சி ஆட்சியர் தகவல்

image

திருச்சியில் முதல் கட்டமாக அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, தொட்டியம், முசிறி, துறையூர்,புள்ளம்பாடி, உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் புறம்போக்கு பகுதிகள் மற்றும் தனியார் இடங்களில் பரவியுள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றிட உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது என திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

மணப்பாறை: ரயிலில் பயணம்.. பலியான இன்ஜினியர்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்,
நேற்று நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார்.ரயில் மணப்பாறையை கடந்து வந்து கொண்டிருந்தபோது அவர் படியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News May 22, 2024

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (21.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மணப்பாறை 43.2 மி.மீ வாத்தலை அணைகட்டு 8.2 மி.மீ முசிறி 29 மி.மீ திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி ஐஎன்டிஐ 1.3 மி.மீ மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 50.4 மி.மீ என திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 139.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 5.8 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது.

News May 22, 2024

திருச்சி ரோல் பால் மைதானத்தில் ஆய்வு

image

திருச்சி கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல்பால் மைதானத்தை, 7வது ரோல் பால் உலக கோப்பை போட்டிக்கு பயிற்சி அளிக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை,ரோல் பால் ஃபெடரேஷன் தலைவர் தபன் ஆச்சார்யா, சர்வதேச செயலாளர் ராஜ் தபாடி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேசிய அளவில் மற்றும் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News May 22, 2024

திருச்சி : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

திருச்சி: இலைதழை பறித்த போது சோக மரணம் 

image

துறையூர் அருகேயுள்ள பகளவாடி அடுத்த ஈச்சம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி திவ்யா நேற்று மாலை அந்தப் பகுதியிலிருந்த கிணற்று மேட்டில் ஆட்டுக்கு இலைதழை பறித்தார். அப்போது அவர் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து துறையூர் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலசந்தர் தலைமையிலான பணியாளர்கள் திவ்யாவின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை.

News May 22, 2024

திருச்சி:காய்களின் விலை கிடு கிடு உயர்வு

image

திருச்சி காந்தி( 22.5.24) மார்கெட்டில் நேற்று காய்கறி வரத்து குறைந்துள்ளதால் இன்று விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ. 40க்கு விற்ற பீன்ஸ் ரூ.200க்கு உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ. 60க்கு விற்ற கேரட் ரூ.100, அவரை, கத்தரி ரூ.30ல் இருந்து ரூ.100,பெல்லாரி 30ல் இருந்து ரூ.50,சின்ன வெங்காயம் ரூ.80 க்கு விற்கப்படுகிறது. இந்த காய்கறி விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

News May 22, 2024

திருச்சி:காய்களின் விலை கிடு கிடு உயர்வு

image

திருச்சி காந்தி( 22.5.24) மார்கெட்டில் நேற்று காய்கறி வரத்து குறைந்துள்ளதால் இன்று விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ. 40க்கு விற்ற பீன்ஸ் ரூ.200க்கு உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ. 60க்கு விற்ற கேரட் ரூ.100, அவரை, கத்தரி ரூ.30ல் இருந்து ரூ.100,பெல்லாரி 30ல் இருந்து ரூ.50,சின்ன வெங்காயம் ரூ.80 க்கு விற்கப்படுகிறது. இந்த காய்கறி விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!