India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று மாலை வழக்கம் போல் பால் விநியோகம் தொடரும் என தெரிவித்தனர்.
திருச்சி முழுவதும் ஆவின் பால் விநியோகம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் எடுத்துச் செல்லும் வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநரக்ளுக்கு 4 மாதமாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கொட்டப்பட்டு ஆவின் பால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சந்தன மஹாலில் நடைபெற்றது.விழாவுக்கு தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமை வகித்தார்.விழாவில் பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.பொருளாளர் அன்சார் முஹம்மது,விக்னேஷ் ரவி,முத்துராஜா,சேகர் செல்லதுரை,வினோத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தீர்மானத்தை வாசித்தார்.உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது.திருச்சி மார்க்கெட்டில் இருந்து வெளி மாவட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு 40% வரி உயர்த்தி உள்ளதால் திருச்சி மார்க்கெட்டில் உள்ள வெங்காயம் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளதாக வெங்காயம் வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராசு இன்று தெரிவித்தார்.
திருச்சி, கிராப்பட்டியில் அந்தோணி என்பவர் ஒரு வீட்டிற்கு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர்,இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழக வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரை தொடர்பு கொண்டார். அன்பழகன் ரூ.20,000 லஞ்சம் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிர படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் இல்லம் தேடி கல்வி திட்டமும் முழு முயற்சியில் நடைபெற்று வருகிறது.எனவே இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு பள்ளிகளை காப்போம் அறிவார்ந்த சமூகத்தை அமைப்போம் என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலைய AIU அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் இருந்து OD 223 Batik Airlines விமானம் மூலம் வந்த பாக்ஸ்களை சோதனை நடத்தினர். அதில், ரூ.32.12 லட்சம் மதிப்புள்ள 1285 இசிகரெட்டுகள் (VAPE) கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் சார்பில் மனித நேயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று திருச்சி ரெங்கா அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்துகொண்டு மனிதநேயம் குறித்து பேசினார்.மேலும் வாசவி கிளப் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் துளசி அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவான இது 2014-ம் ஆண்டு காவிரி ஆற்றின் கரையில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா, வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இது வெப்ப மண்டல வண்ணத்துப்பூச்சி காப்பகமாகவும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.