India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 220 கால்நடைகள் இருப்பு பாதையை கடந்து செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல் ரயில் பாதையைக் கடந்த 262 பேரில், 230 பேர் உயிரிழந்துள்ளதாக கோட்டமேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இருப்பாதை வழிதடத்தில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை ஹரிஷ் குமார் ஓட்டி சென்ற நிலையில் துறையூர் புறவழி சாலையில் சென்றபோது எதிர்பாரதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 9 மாத குழந்தை உட்பட 4 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்லத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து எம்எல்ஏவிடம் நிறைவேற்றி தரக் கோரிக்கை வைத்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அருண் நேரு போட்டியிட்டு வெற்றி 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற எம்பி கனிமொழியிடம் அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்திய அரசின் சார்பில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல் மின்சார விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 2022 முதல் 2 ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.இந்த பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேர் 685 மற்றும் 700க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தின் துணி நூல் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழக அரசு சார்பில் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அழைக்கப்பட உள்ளது. எனவே திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சி பெற https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களுடன் தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் 26.06.2024 தேதிக்குள் விண்ணப்பங்களை https://awards.gov.in and https://padmaawards.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று அதிமுக மாஜி அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா இனி அவர்களுடன் கூட்டணி இல்லை, என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்கு தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. மேலும், அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சிஅல்ல, ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் என்றார்.
திருச்சி மாவட்டம் டோல்கேட் செக்போஸ்ட் அருகே வசிப்பவர் பாஸ்கர் திருமணம் ஆகவில்லை இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பாஸ்கர் நேற்று விஷம் அருந்தியுள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து இவரது தாய் செல்வி புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.