Tiruchirappalli

News January 17, 2026

திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும். பருவ கால விமானமான இவ்விமானம் மார்ச் 31ஆம் தேதி முதல், அக்டோபர் 24ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

திருச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

திருச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

image

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

திருச்சி: மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை

image

காட்டுப்புத்தூர் அடுத்த சூரம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (55). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விரக்தியில் ரவி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்ததில், கரூர் அரசு மருத்துவமனையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

திருச்சி: விரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு

image

சோழன் விரைவு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை ஜன.15-ம் தேதி ஒன்றிய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், “விரைவில் திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்லும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி எம்.பி துரை வைகோ இன்று தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

திருச்சி: பாறைகளுக்கு இடையே வடியும் அதிசய நீர்

image

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில் கல்லுப்புலியான் அய்யனார் கோயில் உள்ளது. அதன் அருகே பாறைகளுக்கு நடுவே தண்ணீர் வடிந்து நீரூற்று சிற்றோடை போல் சென்று கொண்டிருக்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் நீர் வந்து கொண்டிருக்கும். ஆனால் நீர் எங்கிருந்து வருகிறது எனத் தெரியாது என அப்பகுதியினர் கூறுகின்றனர். இதேபோல் உங்கள் பகுதியில் உள்ள சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்க. இதனை அனைவருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!