Tiruchirappalli

News January 20, 2026

திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் மன்னார்புரம், ஸ்ரீரங்கம், முசிறி, எடமலைப்பட்டி புதூர், ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மன்னார்புரம், ஸ்ரீரங்கம், முசிறி, எடமலைப்பட்டி புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News January 19, 2026

திருச்சி: நவகிரகங்கள் இல்லாத கோயில்!

image

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 19, 2026

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 522 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பான மனுக்கள் என 522 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

திருச்சி: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

image

திருச்சி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான ஜனவரி மாத குறைதீர் கூட்டம், வரும் 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

திருச்சி: காங். தெற்கு மாவட்ட தலைவர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டதலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கே.ஆர்.ஆர் ராஜலிங்கம் என்பவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராஜலிங்கத்திற்கு காங்கிரசார் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 19, 2026

திருச்சி: கொலையாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்

image

திருச்சி மாவட்டம்​, முசிறி அருகே தேவானூர் புதூரில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஏற்பட்ட மோதலை விலக்கிவிட்ட கார்த்திக் ராஜா (38) என்ற தொழிலாளி நேற்று முன்தினம் குத்திக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சக்திவேல், தினேஷ்குமார் ஆகிய இருவரையும் தா.பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரையும் நேற்று கைது செய்தனர்.

News January 19, 2026

திருச்சி: தேவை இல்லாத CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

திருச்சி: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

திருச்சி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

error: Content is protected !!