India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <

பொங்கல் பண்டிகை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக, திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வரும் 18-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மணப்பாறை, திருச்சி வழியாக தாம்பரம் சென்றடையும். இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

திருச்சி மாநகரை சுற்றிலும் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடைபெற்றது. அதில், அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கமிஷனர்
இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் 850 காளைகளும், 600 காளையர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைக்க உள்ளார்.

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு நன்றி பாராட்டும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு காளையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

திருச்சி, லால்குடி அடுத்த மாந்துறையில் ஆம்ரவனேசுவரர் கோயில் உள்ளது. சிவபெருமானின் முடி கண்டதாக பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றி தனது பாவத்தை போக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் வழிபட்டால் திருமண தடை, தோஷங்கள், சாபங்கள் மற்றும் நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.