India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

ரயில் ஒன் செயலி மூலம் பெறப்படும் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஒன் செயலி மூலம் ட
பெறும் முன் பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை இன்று (ஜன.14) முதல் ஜூலை.14 வரை அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் வரும் 20 ஆம் தேதி குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகளும், வரும் 23ஆம் தேதி திருக்குறள் நாட்டிய, நாடக, இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையை (0431-2401031) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவிதொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடைய நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் வரும் 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA & FL11 ஆகியவை மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.