India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்து ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்ததால் அதே இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்நிலையில், பாலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. நீளம் 545 மீட்டரும், அகலம் 17.75 மீட்டரும், அதற்கான மொத்த செலவு 106 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9904 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று தேர்வினை எழுத 6719 நபர்கள் மட்டும் வருகை தந்தனர். மீதம் 3,185 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தத் தேர்வானது திருச்சியில் மொத்தம் 31 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
தேசிய மாணவர் படையின் 17 இயக்குநகரங்களுக்கு இடையிலான, தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் திருச்சியில் தனியாா் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 17 அணிகளைச் சேர்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். துப்பாக்கியை கையிலேந்தி நின்ற நிலையிலும், மண்டியிட்டும், 2 மணி நேரத்துக்குள் 50 மீட்டா் தொலைவு இலக்கை குறிபாா்த்தனர்.
திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்கடை பகுதியில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகர, நகர, மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கொண்டனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் நிகழ்வில் ரூ. 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 324 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.106 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.99.26 கோடி மதிப்பீட்டில் 6,176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்கள்.
திருச்சி மன்னார்புரம் பகுதி, சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் “மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம்”விரைவில் அமைய உள்ளது. இந்த நூலகம் அமைப்பதற்கான இடத்தை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தேர்வு செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.
சமயபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புபவர்கள் ஜூலை 19 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் ஆணையர் கல்யாணி நேற்று அறிவித்துள்ளார்.
திருச்சியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய சான்றிதழ் வழங்கப்படும். எனவே இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 13/7/2024ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு,மேற்கு,திருவெறும்பூர் ஸ்ரீரங்கம்,மணப்பாறை லால்குடி,முசிறி, மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு,ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.