India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 202-ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(29) என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்க வேண்டாம் எனவும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்கை தொட்டு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரினை பதிவு செய்ய கூறியுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்க வேண்டாம் எனவும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்கை தொட்டு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரினை பதிவு செய்ய கூறியுள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

திருச்சி மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

திருப்பூர் அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி – பாலக்காடு ரயிலானது (வண்டி எண்: 16843) வரும் 30 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், இரண்டு இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/No_1_Recruitment_notice.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் பிப்.13ஆம் தேதிக்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் ஞானம் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீரங்கிநல்லூரை சேர்ந்த புகார்தாரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம்பெற்ற அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.