Tiruchirappalli

News July 17, 2024

பெரம்பலூர் எம்பி வரவேற்ற ஒன்றிய செயலாளர்

image

திருச்சி மாவட்டம் முசிறி இன்று வருகை தந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேருக்கு ஒன்றிய செயலாளர் சிறப்பான வரவேற்பு அளித்தார். தொட்டியம் ஒன்றியம் பகுதி காட்டுப்புத்தூர் பகுதி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அருன் நேரு எம்பியை ஒன்றிய செயலாளர் திருஞானம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ் வரவேற்பு அளித்தனர்

News July 17, 2024

வேன் மோதி 5 பேர் உயிரிழப்பு

image

திருச்சி சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை, கன்னுக்குடிப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இன்று வளம்பகுடி பகுதியில் விபத்து நடைபெற்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

திருச்சி காங்கிரஸ் அறிவிப்பு

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. இதில் திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

திருச்சி ஐஜி துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம்

image

திருச்சி மத்திய மண்டல அதிகாரிகளுக்கான பிஸ்டல், ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி ஐஜி கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் ரைபில் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு திருச்சி ஐஜி பரிசு வழங்கினார்.

News July 16, 2024

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை, பொறியியல் படிப்புகள் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

மணப்பாறையில் முதலமைச்சர் திறந்து வைப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக மணப்பாறையில் ரூபாய் 14.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

News July 16, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 20ஆம் தேதி காலை 11 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

அக்னிவீர் வாயு தேர்விற்கு ஆட்சியர் அழைப்பு

image

அக்னிபாத்திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆள் சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

திருச்சி ஜோடிக்கு வெள்ளி பதக்கம்

image

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் திருச்சியை சேர்ந்த அனுஷ்கா-ஹிரித்திக் ஜோடி சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!