Tiruchirappalli

News July 19, 2024

உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நடைபயணம்

image

திருச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நடைபயணம் நேற்று நடைபெற்றது. இந்த நடைபயணத்தை மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் டி.நிா்மலாதேவி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இப்பயணம் காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவுற்று, மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக அஞ்சல் ஊழியா்கள் உடல் உறுப்பு தான உறுதியேற்றனர் .

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 19, 2024

இயங்காத ஆலைகளுக்கு மின் கட்டணம்

image

தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இராஜப்பா கூறுகையில், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தால் மாதம் ரூ.3,000 மின் கட்டணம் செலுத்திய தொழிற்கூடங்கள் தற்போது ரூ.12,000-க்கும் மேல் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் 75% சிறு, குறு தொழிற்கூடங்கள் இயங்காமல் உள்ளன. இயங்காமல் இருக்கும் தொழிற்கூடங்களுக்கும் மின் கட்டணம் விதிப்பது பெரும் கொடுமை என்றார் அவர்.

News July 18, 2024

முதலில் வருவோருக்கே முன்னுரிமை- ஆட்சியர்

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், வரகனேரி உயர் வருவாய் பிரிவில் 14 மாடிகள் மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்டு கட்டப்பட்ட 56 வீடுகளில், 38 வீடுகள் ரூபாய் 78 லட்சம் முதல் 81 லட்சம் வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடைப்படையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் செயற்பொறியாளர், கே.கே நகர், திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News July 18, 2024

அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 18, 2024

மாணவர்களுடன் உணவருந்திய ஆட்சியர்

image

திருச்சி குண்டூர் அடுத்த திருவளர்ச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து, பின் உணவருந்தி கலந்துரையாடினார்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 17, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மக்களுக்கு துண்டு பிரசுரம்

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் பொதுமக்களுக்கு இன்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!