India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள 9 காவல்துறை அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி முசிறி துணைக் கண்காணிப்பாளர் யாஸ்மின், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கும், திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் BS V1 புதிய 15 பேருந்துகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜான் வெஸ்டி பள்ளியில் திருச்சி சங்கமம்-நம்ம ஊரு திருவிழா ஜூலை 26 ஆம் தேதி மற்றும் ஜூலை 27ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழா திருச்சியில் உள்ள பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் கொண்டு நடத்தப்பட உள்ளது. இதில் சிலம்பாட்டம், புலியாட்டம், கம்பர் போன்ற கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் முன்னாள் படை வீரரின் மனைவி, திருமணம் ஆகாத மகள்கள், மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து, சான்று பெற்று இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். எனவே இதற்கான உரிய சான்றுகளுடன் வரும் 25ஆம் தேதிக்குள் துணை இயக்குனர், முன்னாள் படை வீரர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
திருச்சி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திருநாவுக்கரசுக்கு திருச்சியில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மென்பொருள் பிரச்சனை காரணமாக இணையவழிச் சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று 8.45 மணிக்கு பெங்களூரு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மாலை 6.30 மணி, 8 மணிக்கு திருச்சி வரவேண்டிய இண்டிகோ விமானமும் ரத்தாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து முசிறி அடுத்த அய்யம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பள்ளி வளாகத்தை பார்வையிட்டார்.
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22-ஆம் தேதி திங்கட்கிழமை திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை ஒட்டி அவருக்கு வரவேற்பு அளிக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நடைபயணம் நேற்று நடைபெற்றது. இந்த நடைபயணத்தை மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் டி.நிா்மலாதேவி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இப்பயணம் காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவுற்று, மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக அஞ்சல் ஊழியா்கள் உடல் உறுப்பு தான உறுதியேற்றனர் .
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.