Tiruchirappalli

News February 6, 2026

திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

image

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

image

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருச்சி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருச்சி: 53,873 பேருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கல்

image

திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த ஜூலை.15 ஆம் தேதி முதல் நவ.4 ஆம் தேதி வரை சாதி சான்றிதழ், வருமான, சான்றிதழ், பட்டா மாறுதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை என 80,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த 53,873 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

திருச்சி மக்களே உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <>இங்கே க்ளிக் <<>>செய்து, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருச்சி: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் <<>>செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News February 5, 2026

திருச்சி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி தாயனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், டெல்டா மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார். இதில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட வேலை தேடுவோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News February 5, 2026

திருச்சி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருச்சி: சிறுமியை கரம் பிடித்த வாலிபர் கைது

image

புத்தாநத்தம் அடுத்த மாங்கனாபட்டியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் பழகியுள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் சிறுமியை மீட்டு, வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!