Tiruchirappalli

News August 23, 2024

திருச்சி விவசாயிக்கு ‘பெஸ்ட் பனானா பஞ்ச்’ விருது

image

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உழவர் தின விழாவில் சிறந்த வாழைத்தார் உற்பத்திக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகளில் அம்மையராஜுக்கு, ‘பெஸ்ட் பனானா பஞ்ச்’ என்ற விருது புதுடெல்லி தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணைய தலைவர் டி.மொஹபத்ரா, தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் பழனிமுத்து ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது.

News August 23, 2024

திருவெறும்பூரில் ஆட்சியர் ஆய்வு

image

திருவெறும்பூர் செல்வம் நகர் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நவல்பட்டு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், இ-சேவை மையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

News August 23, 2024

திருச்சியில் தனியார் பேருந்து எரிந்து நாசம்

image

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் பேருந்து 27 பயணிகளோடு புறப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதனையடுத்து பயணிகளை அலர்ட் செய்த ஓட்டுனர் அவசரமாக இறங்குமாறு தெரிவித்ததால் 27 பேர் உயிர் தப்பினர். ஆனால் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.

News August 22, 2024

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற செயலாளர்

image

மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் கிருத்திகா அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாநில மருத்துவ அணி செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதனையடுத்து முன்னாள் முதல் அமைச்சரும் அதன் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.ராஜ்மோகன் உள்ளார்.

News August 22, 2024

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் அறிவிப்பு

image

திருச்சியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நாளை 1 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் குடற்புழு தொற்றை நீக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான மாத்திரைகள் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், மற்றும் துணை சுகாதார மையங்களில் கிடைக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 22, 2024

பஞ்சப்பூரில் ஆய்வு செய்த அமைச்சர்

image

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 22, 2024

திருச்சி: நள்ளிரவில் பெண் போலீஸ் சஸ்பெண்ட்

image

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிய உத்தரவிடுவது எனவும், இந்த நிலையில் நேற்று இரவு கே.கே.நகர் குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணியை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

News August 22, 2024

திருச்சி கோவிலில் சூப்பர் ஸ்டார் மகள் தரிசனம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய கணவர் விசாகன் நேற்று தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் இருவருக்கும் திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் தரிசனம் செய்த அவர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

News August 22, 2024

போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்ற 3 பேர் கைது

image

மலேசியாவில் இருந்து திருச்சி விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கணேஷ் (வயது 49), முருகேசன் (53), தர்மலிங்கம் (49) ஆகியோர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

News August 21, 2024

திருவெறும்பூரில் 872 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

image

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 40 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரின் முயற்சியில் அவரது தலைமையில் சுமார் 872 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா இன்று மாலை வழங்கப்பட்டது. இதில் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!