Tiruchirappalli

News November 4, 2024

மணப்பாறை அருகே கார் மோதி பெண் பலி

image

மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News November 3, 2024

தொட்டியம் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மாணவன்

image

திருச்சி, தொட்டியம் அடுத்த மேல காரைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலசமுத்திரத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று குளிக்கச் செல்வதாக சென்ற மாணவன் அரசலூரில் உள்ள கிணற்றில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு தீயணைப்பு துறையினர் பிரேதத்தை இறந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 3, 2024

மண்ணச்சநல்லூர் பகுதியில் மாரடைப்பால் வாலிபர் பலி

image

மண்ணச்சநல்லூர் அருகே வடக்கிப்பட்டி பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் ( 35) நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் ஒரு கிராமமே சோகத்தில் உள்ளது.

News November 3, 2024

டூவீலர் அரசமரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி

image

மணப்பாறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் பாசிக் நேற்று இரவு விராலிமலை சாலையில் டூவீலரில் அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அரசமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பாசிக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

படியில் தவறி விழுந்து ஒருவர் பலி – போலீசார் விசாரணை

image

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவர் புதுத்தெரு பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் படியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2024

வெட்டுக்காடு அருகே மினி வேன் விபத்து: ஒருவர் பலி

image

கணக்கம்பட்டி சென்று விட்டு இன்று அதிகாலை 10 பேருடன் வீடு திரும்பி கொண்டிருந்த மினி வேன் எதிர்பாராத விதமாக புத்தாநத்தம் அடுத்த வெட்டுக்காடு அருகே போஸ்ட் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தர். ஓட்டுனர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2024

சிறார்களை தாக்கிய மர்ம நபர்கள் மீது வழக்கு

image

அந்தநல்லூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியே மது போதையில் வந்த சிலர் சிறுவர்களை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த போலீசார் அண்ணாநகர் பகுதியில் சென்று விசாரித்தபோது, தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பியோடிவிட்டதாகத் தெரியவந்ததால் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 1, 2024

ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த எம்.பி

image

புதுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வேயிடம் நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 03.11.2024 பிற்பகல் 03.00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட இருக்கிறது. நம் கோரிக்கையை ஏற்று சிறப்பு இரயில் அறிவித்த தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவிப்பதாக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

சிங்க பெண்ணே என வாழ்த்திய திருச்சி எஸ்.பி.

image

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவரும், திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் மனைவியான வந்திதா பாண்டேக்கு மத்திய அரசின் விருது கிடைத்ததற்கு, எஸ்பி வருண்குமார், திரள் நிதியும் திருடர் கூட்டமும் சாதி வெறி இணைய கூட்டமும் புகைப்படத்தை மார்பிங் செய்து மகிழ்ச்சி அடைந்த நிலையில், நீ உன் செயலால் சிங்கப் பெண்மணியாக பெண் குழந்தைகளுக்கு எதிரானவர்களை போக்ஸோவில் அடைத்து சாதித்தாய் என வர்ணித்து வாழ்த்தினார்.

News November 1, 2024

முசிறியில் ஆற்றில் குளித்த போது மின்னல் தாக்கி பெண் பலி

image

முசிறி சாலியர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (40). இவர் இன்று மதியம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென முத்துலட்சுமியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் முத்துலட்சுமி சுருண்டு கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் முத்துலட்சுமியை முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முத்துலட்சுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!