India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 25.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் மருங்காபுரி பகுதியில் 19.4 மி.மீ,, மணப்பாறை பகுதியில் 7 மி.மீ என மாவட்டம் முழுவதும் 155.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தால் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் செயல்படும், மகளிர் சுய உதவிகுழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில், வழக்கத்திற்கு மாறாக பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ, திரும்ப எடுக்கப்பட்டாலோ அதனை கண்காணிக்க வேண்டும். அது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டுமென வங்கியாளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்/ இதில், திருச்சி தொகுதிக்கு விவேக் உபாத்யாய்(6381277984), மணப்பாறை, திருவெறும்பூர் – அனுனய் பாத்தி(6381538041), முசிறி, துறையூர் – அஜித்குமார் நிராலா(6383946421), லால்குடி, மண்ணச்சநல்லுார் – ராதேகிருஷ்ணா(6381261169), ஸ்ரீரங்கம் – அபினவ் உஜ்ஜய்னியா (6383914108), திருச்சி கிழக்கு, திருவெறும்பூர்- பால்கிருஷ்ணன்கோபால்(6383903295).

தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு (டிடிஎட்) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்ப படிவத்தை <

நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை சீமான் சென்னையில் இன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் நிர்வாகத் தலைநகராக செயல்படுமென அவர் வெளியீட்ட வாக்குறுயில் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் பல்வேறு விதமான வாக்குறுதிகள் இடம்பெறுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அடகு கடை உரிமம் பெற்றவர்கள் தங்கள் கடன் கொடுத்தவர்கள் பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டும். தேர்தல் பறக்கும் படையினர் பதிவேடுகளை கோரும் போது அதனை ஆஜர்படுத்த வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் கடன் கொடுக்க கூடாது. யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டுமென தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பொது பார்வையாளர்களாக திருச்சி மேற்கு தொகுதிக்கு ஜெகதீஷ் பிரசாத் மீனா (6381137496), ஸ்ரீரங்கம் – ஜெரம்பேடா (6380128857), மணப்பாறை, திருவெறும்பூர் – சக்ரதார் பாபு (6381279675), முசிறி, துறையூர் – பிஜய்குமார் தாஸ் (6381550233), லால்குடி, மண்ணச்சநல்லுார் – பிரவீன் குமார் லக்கர் (6381157062), திருச்சி கிழக்கு – மதுஸ்மிதா சாஹூ (6381238681) நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளுக்கான காவல் பார்வையாளராக, அபய்சிங் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி வந்துள்ள அவர், திருச்சி அரசு சுற்றுலா மாளிகை ஏ 2வது அறையில் முகாமிட்டுள்ளார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, நேரிலோ, 6381273596 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.