Tiruchirappalli

News October 2, 2024

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

image

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் சாதாரண சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 2, 2024

வயலில் மாடு மேய்ந்த விவகாரம் – வீடு சூறை

image

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் பசுமாடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரனின் அண்ணனான செல்வராஜ் என்பவரது வயலில் மேய்ந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கங்காதரன் முருகேசன் வீட்டையும், வாகனத்தையும் அடித்து நொறுக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையும் திமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

News October 2, 2024

சாலை விபத்தில் குழந்தை பரிதாபமாக பலி

image

புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் டூவீலரில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் டூவீலரில் சென்ற சிறுவன் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 1, 2024

திருச்சி-காரைக்கால் ரயில் இன்று முதல் ரத்து

image

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக காரைக்கால்-திருச்சி, காரைக்கால், தஞ்சை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் வரும் 31ஆம் தேதி வரை திருவாரூர்- காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்படும் நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படும் ரயில்கள் திருவாரூர், திருச்சியில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரயில்கள் திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும் என்று அலுவலர் வினோத் தெரிவித்தார்.

News October 1, 2024

ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் மரணம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா. இவர் கொண்டயம்பேட்டையில் உள்ள இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அவர் மீது எந்திரம் ஒன்று மோதி நேற்று காயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News October 1, 2024

தனியார் பள்ளி வேன் மோதி விபத்து: 3பேர் காயம்

image

புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சமத்துவபுரம் என்ற இடத்தில் எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2024

தீபாவளிக்கான விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 1, 2024

லால்குடி அருகே மனைவியை கொன்ற கணவன்

image

லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ராஜேஷ் மனைவி அனுசியாவை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த அனுசியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 1, 2024

திருச்சியில் இலவச மருத்துவ முகாம்

image

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜர் அளித்த பேட்டியில், அக்.6ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச சித்த மருத்துவ முகாம் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதனை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல வகையான நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News October 1, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள்/படைப்பணியின் போது மரணம் அடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 15.10.2024க்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!