India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இன்று 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி கேம்பியன் பள்ளி, காட்டூர் மான்ட்போர்டு பள்ளி, காஜாநகர் சமது பள்ளி, திண்டுக்கல் சாலையில் ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் ஸ்கூல் என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் அனைத்து பள்ளிகளுக்கும் மோப்பநாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே காட்டூரில் செயல்படும் மான் போர்டு மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழப்பு செய்யும் பிரிவு போலீசார் பள்ளியில் முழுமையாக சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் தலைமையில் அரியமங்கலம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,050 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட காஜா மொய்தீன் என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் தொடர் கடத்தலில் ஈடுபட்டு வருவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதனையடுத்து திருச்சி காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
திருச்சி மத்திய சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கைதி திராவிடமணி என்பவரை சிறையில் அடைப்பதற்கு முன் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து சட்ட நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது என எஸ்.பி. வருண் குமார் தெரிவித்துள்ளார்.
துவாக்குடி அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேசம் மாணவி ஓஜஸ்விகுப்தா கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் புகார் கொடுத்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து தங்களது மகளை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றால் அந்தந்த காவல் சரகத்தில் பணியாற்றும் சார் ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மொத்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதிகுடியைச் சேர்ந்த ராஜேஷ் -அனுசுயா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் கஞ்சா போதையில் அடிக்கடி அனுசியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ் அனுசுயாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில், அனுசியா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை தேடி வருகின்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக அமைச்சர் கோவி செழியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடத்தின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எனக்கு உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கியதற்கு முதலமைச்சருக்கு எனது நன்றிகள்” என தெரிவித்தார்.
சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த IX விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஓர் ஆண் பயணியின் உடைமையில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுகள் மற்றும் 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி அதவத்தூர், துவரங்குறிச்சி, இ.பி.ரோடி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (அக்.3) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, துவரங்குறிச்சி, நாச்சிகுறிச்சி, முள்ளிகரும்பூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மணி மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.