Tiruchirappalli

News October 4, 2024

திருச்சியில் இலவச பயிற்சி வகுப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பதிவாளர், உதவியாளர், துணை வணிகவரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14.10.2024ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. எனவே இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News October 4, 2024

திருச்சி அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்

image

மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த சரவணன் கடந்த இரு தினங்களாக காணவில்லை. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்த மணப்பாறை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 4, 2024

திருச்சி டைடல் பார்க் கட்டுமானத்திற்கு டெண்டர்

image

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடி மதிப்பில், 5.58 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள இந்த டைடல் பார்க்கை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு. மேலும் இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 4, 2024

அவதூறு பதிவுகளை நீக்க கோரி எஸ்.பி. மனு

image

நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்க கோரி எஸ்.பி. வருண்குமார் மனு அளித்துள்ளார். பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு, எக்ஸ் வலைதள பொறுப்பு அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News October 4, 2024

பாதாள சாக்கடை இணைப்பு முகாம்-

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:திருச்சி வார்டு எண் 39,42,43ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு பாண்டியன் மஹால், காந்தி சாலை மெயின் ரோட்டில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுக்கொண்டார்

News October 4, 2024

திருச்சியில் 5 பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

News October 4, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர்,காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை,கல்வி சான்றிதழ்களின் நகல்களை எடுத்துக்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News October 4, 2024

திருச்சியில் நாளை மின் நிறுத்தம்

image

திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம், புத்தாநத்தம், சமயபுரம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (05.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, வள்ளுவர் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மணி மாலை
4 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 3, 2024

திருச்சி மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர் நியமனம்

image

தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, என்பவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வராக கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளார். கலைவாணி சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

News October 3, 2024

என்ஐடி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுஜய் சிதி என்ற மாணவி திருச்சி என்ஐடி கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டிடக்கலை பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததாலும் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது விருப்பம் இல்லாததால் விடுதியில் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

error: Content is protected !!