India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, ஜாதி சான்றுகள், இதர சான்றுகள், அடிப்படை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 717 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும், இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்த விவாதிக்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி தேவதானம் பகுதியில் செயல்படும் சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சமயபுரம் அருகே கூத்தூரில் செயல்படும் எஸ்விஎம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்களுக்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தன்மையா உதயநிதி என்ற பெயரில் ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா அதிக அளவில் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வீடுகளில் சோதனை மேற்கொண்டதில் 3.50 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சரவணன் அவரது மனைவி சுவேகா தீனதயாளன், சீலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, துறையூர், மணிகண்டம், பெட்டவாய்த்தலை, சிறுகமணி, கம்பரசம்பேட்டை, முருகம்பட்டி, கார் கேட், அளுந்தூர், ரங்கநாதபுரம் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (12.11.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டியம் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி விடுதியில் சிறுமி ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை மீண்டும் விடுதிக்கு சிறுமியும், அவரது சகோதரியும் திரும்பியுள்ளனர். இந்நிலையில் விடுதியில் தங்கையை நீண்ட நேரம் காணாததால் அவரது சகோதரி தேடியபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டுப்புத்தூர் அருகே சீத்தப்பட்டி டாஸ்மாக் கடை அருகே பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த மாதம் 27ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பல் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையில் இன்று போலீசார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், புவனேஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 6 பேரை தேடி வருகின்றனர்.
பாகனூர் அருகே உள்ள பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (69). இவர் விவசாய பணிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் பூங்குடியில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் சறுக்கி தண்ணீருக்கு மூழ்கி மாயமானார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு தேடி கிடைக்காத நிலையில் நேற்று தீயணைப்புத்துறையினர் முதியோர் உடலை மீட்டனர்.
திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த மூன்று வருடங்களாக சுமார் 460 சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளை முடிப்பதற்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட நியமனர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 900 பேர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 257 வழக்குகள் முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.