India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் கணவனை இழந்து கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு ரூ.6 கோடி செலவில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சி 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், புகைப்படத்துடன் கால்நடை மருந்தகத்தை அணுக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பருவமழை காலத்தில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே பொதுமக்கள் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் வகையில், தமிழக அரசு “டிஎன் அலர்ட்” என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியினை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ள நிலையிலும் எச்சரிக்கை எழுப்பும் என்று திருச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9025642160, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறக்க உள்ளதை ஒட்டி திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திராவிட மாடல் அரசின் வெண்கொற்றக்குடை மக்களைக் காத்து நிற்பது போல், பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கி அமைதி இழந்து தவிக்கும் சென்னை வாசிகளை ஆசுவாசப்படுத்தி ஒரு புத்துணர்ச்சியை வழங்க காத்திருக்கிறது கலைஞர் நூற்றாண்டு பூங்கா என தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் பத்மநாபன் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அடிமனை பிரச்சனை சம்பந்தமாக பலமுறை மனுகொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறநிலையதுறை உதவியுடன் நிரந்தர தீர்வு காணவில்லையெனில் சுமார் 3,000 குடும்பங்கள் முதற்கட்டமாக வீதிக்கு வந்து போராடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.
கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று உப்பிலியபுரம் பச்சைமலை பகுதியில் கிழங்கு ஏற்றுவதற்காக நேற்று ஆத்தூரிலிருந்து சிவராஜ் என்பவர் ஓட்டி வந்த லாரி சிக்கத்தம்பூர் பகுதியில் வந்தபோது
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுனர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். கனமழை காரணமாகவே விபத்துக்குள்ளானது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
திருச்சி மாவட்டத்தில் சிறுகமணி, மணிகண்டம், பெட்டவாய்த்தலை, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், கொப்பம்பட்டி, துறையூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (அக்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலரன் சாலையில் மாவட்ட மைய நூலகத்திற்கு அருகில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.20 கோடி செலவில் மாநகராட்சியால் நிறுவப்பட்டது. 650 நான்கு சக்கர வாகனங்கள், 950 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் இடத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட உள்ளது என மாநகராட்சி உயரதிகாரி தெரிவித்தார்.
அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஹரிகிருஷ்ணன் என்பவர் இந்திய அளவில் நடைபெற்ற 73ஆவது மல்யுத்த போட்டியில், 73 ஆண்டுகளில் இதுவரை யாரும் வாங்காத தங்கப்பதக்கத்தை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்று அவரை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் நேரில் அழைத்து அவரது வெற்றிக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி குற்றப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்குதமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்க பட உள்ளது. இதற்கு, இன்று சென்னை ஐஏஎஸ் டிஐஜி திருநாவுக்கரசர் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தங்களின் குடும்பத்தினருக்கும், மேலும் தாங்கள் பல சாதனைகளை செய்து பல பதக்கங்களையும், உயர்வுகளையும் பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.