Thiruvarur

News December 29, 2024

கமலாபுரம்: லாரி மோதி முதியவர் பலி

image

கொரடாச்சேரி கமலாபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கமலாபுரம் கடைவீதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஓட்டுநர் மோகனை
போலீசார் கைது செய்தனர்.

News December 28, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (28.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் மீது வழக்கு

image

எரவாஞ்சேரி அடுத்த கூந்தலூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்கிற இளைஞர் சிறுவயதில் இருந்து காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணை ஏமாற்றி அவருக்கு அடிபணிய வைத்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதால் தமிழ்வாணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 28, 2024

திருவாரூர் அருகே லாரி மோதி இளைஞர் பலி 

image

கமலாபுரம் அருகே பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் தேநீர் அருந்துவதற்காக குடிப்பதற்காக கமலாபுரம் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்பொழுது திருவாரூரில் இருந்து வேகமாகச் சென்ற லாரி மணிகண்டன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மோகனை போலீசார் கைது செய்தனர்.

News December 28, 2024

திருவாரூர்: இலவச குரூப்-4 தேர்வு பயிற்சி வகுப்புகள்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும் ஜன.2 முதல் TNPSC குரூப்-4 தேர்வுகளுக்கான  நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகளுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE

News December 28, 2024

முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ,11, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 6 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை காலை மாலை என இரு வேளையும் நடைபெற இருக்கிறது. இதற்கான கால அட்டவணையை திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News December 28, 2024

முத்துப்பேட்டை: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

image

முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பண்ணை பொது கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (46). விவசாயியான இவர் நேற்று மாலை 6 மணியளவில் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி அருகில் இருந்த செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். தகவல் அறிந்து வந்த எடையூர் போலீசார் ராஜாவிடம் பேசி அவரை கீழே இறங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 27, 2024

குடவாசல் அருகே ஏழு பேர் மீது வழக்குப் பதிவு

image

குடவாசல் அருகே ஓகை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்துள்ளார். அவர் பணத்தை திருப்பி கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டு முரளியை வீட்டின் அருகே சுகந்தி, கேசவன், இளங்கோவன், துரைப்பாண்டி ,வெங்கடேஷ், சக்திவேல், சுகன்யா ஆகிய ஏழு பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2024

கோலம் போடுவதில் தகராறு: யோகா மாஸ்டர் மீது தாக்குதல்

image

நீடாமங்கலம் அருகே உள்ள தெப்பக்குளம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் யோகா மாஸ்டர். இவரின் எதிர் வீட்டுக்காரர் வாசு. இருவருக்கும் யார் முதலில் கோலம் போடுவது என்ற போட்டி இருந்த நிலையில், சாமிநாதன் நேற்று வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வாசு, சுகுணா, வீரமணி உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2024

திருவாரூரில் ரூ.69 லட்சம் மோசடி

image

திருவாரூர் துர்க்காலையா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரை வாட்ஸ்ஆப் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் சிபிஐ-யில் இருந்து பேசுவதாக கூறி, மனித கடத்தல் மற்றும் போதை பொருள் வழக்கில் உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டியுள்ளார். இதனை நம்பிய பத்மநாபன் மர்ம நபரின் வங்கி கணக்குக்கு ரூ.69.39 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!