India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூத்தாநல்லூர் அருகே வக்ராநல்லூர் பூதமங்கலத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, “பாஜகவை ஆதரிக்கும் கட்சிகள் ஆட்சி நடத்தக்கூடிய மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை வழங்கி வருகிறார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து கொண்டே இருக்கிறது பாஜக. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளான பல்லவராயன் கட்டளை அக்கறை கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள பயிர்கள் தற்போது மழை நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மன்னார்குடி குமார் நகரை சேர்ந்தவர் ராம மணிகண்டன். இவர் திருமணம் வரன் வேண்டி திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அப்போது போலி பெண் ப்ரோபைல் மூலமாக அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.38,67,771-யை பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி அருகே குக்கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (24) என்பவர் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கருவுற்றார். இந்நிலையில் புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்ததாக மன்னார்குடி போலீசார் ராகுல் மீது நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.30) மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக கரட் கருண் உத்தவ் ராவ் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் மதுரை காவல் துணை ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவாரூர் எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார் கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (29.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை இயக்கப்படும் டெமு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்கும் படி பயணிகள் பலர் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி வரும் ஜன.1-ஆம் தேதி முதல் பட்டுக்கோட்டை- திருவாரூர் டெமு ரயில், பட்டுக்கோட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு பதிலாக மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு திருவாரூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரடாச்சேரி கமலாபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கமலாபுரம் கடைவீதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஓட்டுநர் மோகனை
போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (28.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.