India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.10) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.7) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.8) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (ஜன.10) சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்ததால் அதை ஈடு செய்யும் பொருட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்த குமரன் (59), தனது சித்தி வேதவல்லி இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவரை, சித்தி வேதவல்லி படிக்க வைத்து போலீஸ் துறையில் சேர உதவியுள்ளார். அதிக பாசத்தால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

திருவள்ளூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<

திருவள்ளூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

திருவள்ளூர்: உருவ படம் திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பங்கேற்றிருந்தனர். அப்போது, மேடையில் ஏறிய தொண்டர் ஒருவர், தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி திருமாவளவனை கேக் வெட்ட அழைத்துள்ளார். அப்போது, ”இது துக்க நிகழ்வு, சற்று பொறுங்கள். பிறகு வெட்டலாம்” எனக் கூறியதால், ஆத்திரமடைந்த தொண்டர் கேக்கை தூக்கி அடித்துவிட்டுச் சென்றார். இதனால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.