India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர்: பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 10 கி.மீ தூரத்திற்கு ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி – போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்களோ, உங்களது உறவினர், நண்பர்களோ தீரா நோயால் பாதிக்கப்பட்டவரா..? அல்லது உடல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறீர்களா..? நமது ஊரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நீராடி, பெருமாளை தரிசித்தால் சர்வ நோய்களும் தீர்வதோடு, புண்ணியங்களும் வந்து சேரும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருநின்றவூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் வசித்து வந்த அருண்குமார்(25) தனது மனைவி ஷாகிதாவுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷாகிதா பார்த்த போது, வாயில் நுரை தள்ளியவாறு அருண்குமார் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்(34) என்பவர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரக்ச்ஷிற்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஜன.10) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஜெ.என்.சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின் புறம், புங்கத்தூர், போளிவாக்கம், வணவாளநகர், ராஜாஜிபுரம், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பாண்டூர், மஞ்சங்குப்பம், ஏகாட்டூர், பட்டரை, நாராயணபுரம் ராமஞ்சேரி பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதட்டூர்பேட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புல்லட். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தினேஷ்(18). நேற்று (ஜன.09) அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள ஈச்சந்தோப்பு அருகே வரும் போது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்த அவர் பலியானார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.10) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Sorry, no posts matched your criteria.