Thiruvallur

News January 11, 2026

திருவள்ளூரில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 11, 2026

திருவள்ளூர்: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

திருவள்ளூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M <>parivaahan <<>>போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

பழவேற்காடு பகுதியில் நாளை மீன் பிடிக்க தடை

image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதள மையத்தில் நாளை காலை 10:17 மணிக்கு PSLV-C62 ராக்கெட் மூலம் EOS-N1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

News January 11, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

FLASH: திருத்தணியில் ஒன்றிய ஆணையர் திடீர் மரணம்

image

திருத்தணி ஒன்றியத்தில், கிராம ஊராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்தவர் சந்தானம். ஜேஜே நகர் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு தூங்கச் சென்றவர், இன்று காலை எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News January 11, 2026

திருவள்ளூர்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News January 11, 2026

திருவள்ளூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவள்ளூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்

News January 11, 2026

திருவள்ளூர்: மண் குவியல் எமனானது

image

வேலூர் மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு தற்காலிக ஊழியர் விவேக் குமார் (35), தனது அண்ணன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜூ பேட்டை பகுதியில் சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!